'பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்' - நிர்மலா சீதாராமன்


பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம் - நிர்மலா சீதாராமன்
x

பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கொட்டிவாக்கத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஒரு அரசியல் கட்சிக்கு பிரதான சாலையில் பெரிய கட்டிடம், 100 அடி உயரத்தில் மிகப்பெரிய கொடிக்கம்பம் ஆகியவை மட்டும் போதாது. கட்சிக்கு தேவையான கட்டிடங்களை நாம் கிராமங்கள் தோறும் நிச்சயம் கட்டுவோம்.

அதே சமயம், ஒரு கட்சியின் கொள்கையை நம்பி எத்தனை மக்கள் சேர்கிறார்களோ, அதை வைத்துதான் அது பெரிய கட்சியா, அல்லது சிறிய கட்சியா என்பது தீர்மானிக்கப்படும்.

பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படுவதில்லை. கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டரையும் வளர்ப்போம். அவர்களை தலைவர்களாக உருவாக்குவோம். பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Next Story