அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்- மதுரையில் நடிகர் வடிவேலு பேட்டி


அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்- மதுரையில் நடிகர் வடிவேலு பேட்டி
x

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று மதுரையில் நடிகர் வடிவேலு பேட்டி அளித்தார்

மதுரை


மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் மாரிமுத்து எல்லோரையும் விட்டு சென்று விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என் தம்பியின் மறைவிற்காக எங்கள் குடும்பத்தில் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போதுதான் மாரிமுத்து இறந்த செய்தி கேள்விப்பட்டேன். நான் கூட நாடகத்தின் இறுதி காட்சியில் ஏதும் சாவது போல் நடித்து இருப்பார் என்று முதலில் அதை நம்பவில்லை. கடைசியில் பார்த்தால் குரல் பின்னணி கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்த போது, ராஜ்கிரணுடன் நானும் அவரும் நெருங்கி பழகினோம். அவருடைய படம் தான் கண்ணும் கண்ணும். அந்தப் படத்தில் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும். அந்த நகைச்சுவையை அவர் தான் உருவாக்கினார். அதே படத்தில் கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையும் அவர்தான் உருவாக்கினார். மிகப்பெரிய சிந்தனையாளர் மனது விட்டு சிரிப்பார். இவர் இறந்தது திரை உலகத்திற்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. மாரிமுத்துவின் குடும்பத்தார் இந்த நேரத்தில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கள் யாராலும் முடியாது. அந்த மன தைரியம் வருவதற்கு நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றார். இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு, யார் வேண்டுமானாலும் வரலாம். திறந்த கதவு தானே அது. எல்லோருமே வரலாம். நீங்களே வரலாம் என கூறி சென்றார்.


Related Tags :
Next Story