தகுதியான பயனாளிகளை விட்டுவிடக்கூடாது


தகுதியான பயனாளிகளை விட்டுவிடக்கூடாது
x
தினத்தந்தி 9 July 2023 4:01 PM GMT (Updated: 10 July 2023 10:23 AM GMT)

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளை விட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

தி.மு.க. ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மகளிர் அணி துணை செயலாளர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உரிமைத்தொகை

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் எந்த ஒரு தகுதியான பயனாளியும் விட்டுவிடக்கூடாது. இந்த திட்டத்தை அறிமுப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, இந்த திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகள் பங்கேற்கும் வகையில் கவிதை,கட்டுரை, பேச்சுப்போட்டி, பாரம்பரிய போட்டி, பெண்களுக்கு கோலம், கும்மியாட்டம் நடத்த வேண்டும். மேலம் இலவச மருத்துவ முகாம், ரத்த தானம், கண்தானம், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சி

வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

திருப்பூர் ெதற்கு மாவட்ட பகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்த்தமைக்கு தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி கண்காணிப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வது

திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் சிறப்பாக வழிநடத்தும் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வீடுதோறும் துண்டு பிரசுர வினிேயாகம் செய்தும், திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story