கோவிலில் நடனம் ஆடியதில் முன்விரோதம்; வாலிபருக்கு கத்திக்குத்து

கோவிலில் நடனம் ஆடியதில் முன்விரோதம்; வாலிபருக்கு கத்திக்குத்து
x

சேலம் கோவிலில் நடனம் ஆடியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம் கோவிலில் நடனம் ஆடியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவிலில் தகராறு

சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 28), பிரவீன்குமார் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த ஆடி மாதம் நடந்த காளியம்மன் கோவில் பண்டிகையின்போது இருவரும் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் காக்காயன் சுடுகாடு அருகில் முருகன் நின்று கொண்டிருந்தார். அப்போது பிரவீன்குமாரின் நண்பர்களான பாரத், ஜீவா, சம்பத்குமார் ஆகியோர் அங்கு சென்று பிரவீன்குமாரிடம் ஏன் தகராறு செய்தாய்? என கேட்டுள்ளனர்.

கத்திக்குத்து

பிறகு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் முருகனை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story