கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருச்சி

தொழிலாளர் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாக கட்டிடத்தில் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் தலைமையில் தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதில் தொழிலாளர் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் மற்றும் கடைகள் நிறுவனங்களில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாவட்டத்ைத கொத்தடிமை தொழிலாளர் அற்ற மாவட்டமாக உருவாக்கிடவும், கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது குறித்து தகவல் பெறப்பட்ட 24 நேரத்திற்குள் அவர்களை மீட்டு மறுவாழ்வு அளித்திட அனைத்து துறை அலுலவர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியுள்ளார். மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதேபோல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர் குமரேசன் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எற்றுக்கொண்டனர். நகர் நல அலுவலர் மருத்துவர் மணிவண்ணன், உதவி ஆணையர் ஆர்.ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story