பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு ஊர்வலம்
பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
சனாதன எதிர்ப்பு ஊர்வலம்
பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தமிழர்கள் கலைகளை பறைசாற்றும் வகையில் தாரை தப்பட்டை, பறை இசை முழங்க சிலம்பம், ஓயிலாட்டாம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் பேரணியில் இடம்பெற்றன. மேலும் பெரியாரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும், கருத்துக்களையும் வலியுறுத்தும் வகையில் விளம்பர தட்டிகளுடன் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெரியார் வேடமணிந்தும், சமூக நீதியை வலியுறுத்தும் வகையிலான பதாகைகள் ஏந்திக்கொண்டும் சென்றனர். ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நசியனூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் ரோடு வழியாக சென்று பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.
சமூகநீதி உறுதிமொழி
அதைத்தொடர்ந்து தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், தலைமை பேச்சாளர் இளையகோபால், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பில் உள்ள கட்சிகள், அமைப்புகள், விவசாய அமைப்புகள், வணிக சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.