காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில்  முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமான நேற்று முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் எனவும், பொது இடங்களான ஆஸ்பத்திரி, வங்கி, பஸ் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அலுவலக மேலாளர் (பொது)ரமேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story