போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 10:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், உதவி கலெக்டர் யுரேகா, துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, மாவட்ட தமிழ்த்துறை உதவி இயக்குநர் (பொ) அன்பரசி, தாசில்தார்கள் மகேந்திரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story