போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி


போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

வாலாஜாவில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜாவில் போலீசார் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்ட இந்த பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வாலாஜாவின் பிரதான சாலைகள் வழியாக சென்ற பேரணி காந்தி பூங்கா அருகே முடிவுற்றது. பின்னர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடைபெற்றது.


Next Story