போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை மற்றும் போதை நோய் பணிக்குழு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயலாளர் ஜெயந்தன் டீ கிரேஸ் தலைமை தாங்கினார். உத்தமர் காந்தி சேவை மன்ற தலைவர் ஜேசுராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி எம்.பிரீத்தா கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி பள்ளி முன்பு இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக 1-ம் கேட் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேசிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பேரணியில் ஸ்டேட் வங்கி காலனி பங்குத்தந்தை ஜெரோஸின் கற்றார், தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர், அந்தோணியார்புரம் பங்குத்தந்தை ஸ்டீபன் மரியதாஸ், பிஷப் இல்ல பாதிரியார் மார்டின், பாத்திமா நகர் உதவி பங்குத்தந்தை விமல்ஜான் டீ சில்வா மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story