போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கர்நகரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லையை அடுத்த தாழையூத்து சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், கல்லூரி மேலாளர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நசீர் அகமது வரவேற்று பேசினார்.
தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் டிப்ளமோ படித்து விட்டு என்ஜினீயரிங் போன்ற மேற்படிப்பு படிக்கலாம். தற்பொழுது டிப்ளமோ படித்தவர்கள் வழக்கறிஞராக படிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தை அடைய போதைப்பொருட்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்'' என்றார். உடற்கல்வி ஆசிரியர் வரதன் நன்றி கூறினார்.