லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

தமிழக- கேரள எல்லை பகுதியான செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் முறைகேடாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு லாரி டிரைவர் அய்யப்பன் என்பவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கொல்லம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சஜாத் தலைமையில் பட்டாழி தெற்கு வேளாண் அலுவலர் சுனில் வர்கீஸ், லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜோஷி மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சுனில்குமார், ஷபி, சுனில், தேவ்பால் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆரியங்காவு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆர்.டி.ஓ சோதனை சாவடி அதிகாரிகளின் முன்னிலையில் ஆரியங்காவை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் லாரிகளில் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஏஜெண்டிடம் இருந்து ரூ.23,020 பறிமுதல் செய்யபட்டது. மேலும் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.2,100 என மொத்தம் ரூ.25,120 பணமாக கைப்பற்றப்பட்டது. மேலும் லஞ்சமாக பெற்ற பழங்கள், மிட்டாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story