நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசுக்கு 2-3 நாள்களில் பதில் அளிக்கப்படும்- மா. சுப்பிரமணியன்


நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசுக்கு 2-3 நாள்களில் பதில் அளிக்கப்படும்- மா. சுப்பிரமணியன்
x

நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசுக்கு 2-3 நாள்களில் பதில் அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை தொலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்து தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதில் மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு 2-3 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது' என்றார்.



Next Story