ராஜவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா
ராஜவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி செட்டியார் ஊருணி கரையில் உள்ள ராஜ விநாயகர் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பிரகாஷ் தேசிகர் குழுவினர் ராஜ விநாயகருக்கு 27 வகையான சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோவில் பின்புறம் உள்ள அரசமரம் மற்றும் வேப்ப மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ராஜ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேம்பு, அரச மரத்திற்கு திருமாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. பழமையான இந்த மரங்களை சுற்றி வந்து பெண்கள் தரிசித்தால் திருமணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும் என்பது இந்த பகுதி பக்தர்களின் நம்பிக்கை. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story