பெரியகுளத்தை மராமத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு-உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை


பெரியகுளத்தை மராமத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு-உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
x

பெரியகுளத்தை மராமத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தை உடனடியாக மராமத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதி ஆர்.முருகன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்து சென்னை தலைமை செயலகத்திற்கு நடைபயணமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நேற்று திசையன்விளை தாசில்தார் அலுவலகத்தில் இது சம்பந்தமான சமாதான கூட்டம் நடைபெற்றது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் (பொறுப்பு) சந்திரசேகரன் தலைமை தாங்கினார். திசையன்விளை தாசில்தார் (பொறுப்பு) பத்மபிரியா, பொதுப்பணித்துறை பொறியாளர் மணிகண்டராஜா, வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், போலீசார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் உதவி கலெக்டர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள தலைமை பொறியாளரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தனர். அப்போது குளத்தின் கரை பகுதிகளில் அலைக்கற்கள் பதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்தனர்.


Next Story