அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சி விவரம்


அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சி விவரம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:30 AM IST (Updated: 3 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சி விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான அ.ஆனந்தன், தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் மாலை 3 மணிக்கு தொடங்கி கடையம் பகுதி வரை 5 மணி வரை நடைபெறுகிறது.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் தென்காசி நகரப்பகுதியான கீழப்புலியூரில் மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் முடிகிறது. பின்னர் அவர் குற்றாலத்தில் தங்குகிறார்.

5-ந் தேதி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடையநல்லூர் நகராட்சி பகுதியான மேல கடையநல்லூரில் மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு கிருஷ்ணாபுரத்தில் முடிகிறது. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புளியங்குடி நகராட்சி பகுதியான எலுமிச்சை மார்க்கெட் அருகே மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு சிந்தாமணி பஸ் நிலையத்தில் பாதயாத்திரை முடிவடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story