சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆஞ்சநேயர் சிலை உடைப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆத்தீஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆத்தீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் அங்கு விநாயகர், முருகன் என சிறிய அளவில் தனி சன்னதிகள் உள்ளன. அங்குள்ள ஆலமரத்தடியில் 1½ அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. அந்த கோவிலில் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ காலங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று வழக்கம் போல கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு சுற்றி வரும்போது கோவிலின் பின்புறம் ஆலமரத்தடியில் இருந்த ஆஞ்சநேயர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆஞ்சநேயர் சிலையை உடைத்த மர்ம நபர் யார்? என்பது தெரியவில்லை.
Related Tags :
Next Story