கால்நடை தடுப்பூசி முகாம்
வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கோமாரி நோய் பற்றியும் அந்த நோயின் அறிகுறிகள் நோயின் பராமரிப்பு தடுக்கும் முறைகள் பற்றி பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. மண்டல இணை இயக்குனர் சஞ்சீவராஜ், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கோட்ட உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, மருத்துவர் பெரியசாமி, தெற்குமயிேலாடை பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவள்ளி செந்தில் வேல், துணைத் தலைவர் முருகன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். இதில் 70 பசுமாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story