கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்இன்று தொடங்குகிறது


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை சுகாதார விழிப்புர்வு முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமநல்லூர் ஊராட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கனூர், வண்டிப்பாளையம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் இன்று (புதன்கிழமையும்), செஞ்சி ஒன்றியம் வேலந்தாங்கள் ஊராட்சியில் 18-ந் தேதியும், காணை ஒன்றியம் டி.கொசப்பாளையம் ஊராட்சியில் நாளை (வியாழக்கிழமையும்), திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் துளுக்கம்பாளையம் ஊராட்சியில் 17-ந் தேதியும், கோலியனூர் ஒன்றியம் சுந்தரிபாளையம் ஊராட்சியில் 18-ந் தேதியும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

கால்நடை பராமரிப்பு

இம்முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, தாது உப்புக்கலவை வழங்குதல், மலடுநீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படவுள்ளது. மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டு கால்நடைகளை வளர்ப்பது, பராமரிப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இம்முகாமை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story