விழுப்புரம் மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில்கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


விழுப்புரம் மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில்கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 19 ஊராட்சிகளில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறைமூலம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியம், மயிலம் ஊராட்சி ஒன்றியம் வெளியனூர், கண்டமங்கலம் ஒன்றியம் கொத்தம்பாக்கம், கலித்திராம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

அதேபோன்று, காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடங்குணம், கோலியனூர் ஒன்றியம் குடுமியாங்குப்பம், வானூர் ஒன்றியம் பூத்துறை, விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம், மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தனந்தல்,

வல்லம் ஒன்றியம் ஏதாநெமிலி ஆகிய ஊராட்சிகளில் நாளை (புதன்கிழமையும்), செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம், மயிலம் ஒன்றியம் கேணிப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஏமப்பூர், கொளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் 27-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மேலும், கண்டமங்கலம் ஒன்றியம் தாண்டவமூர்த்திப்பாளையம், கோலியனூர் ஒன்றியம் கொளத்தூர், வல்லம் ஒன்றியம் மொடையூர், மரக்காணம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஆகிய ஊராட்சிகளில் 28-ந் தேதி (சனிக்கிழமையும்), விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் ஊராட்சியில் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்) சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

குடற்புழு நீக்கம்

முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, ஆண்மை நீக்கம், தாது உப்புக்கலவை வழங்குதல், மலடுநீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளது. மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டு கால்நடைகளை வளர்ப்பது, பராமரிப்பது குறித்து ஆலோசனை வழங்கவுள்ளனர். எனவே பொதுமக்கள்,முகாமை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story