கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஆலங்குளம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் கிராமத்தில் நெட்டூர் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார். கிடாரக்குளம் பஞ்சாயத்து தலைவர் சாந்தி ஆண்டி தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட கால்நடை பண்ணையின் துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர் மற்றும் நெல்லை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் ஜான்சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றி மழைக்காலங்களில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முகாமில் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம், ஊத்துமலை கால்நடை மருத்துவர் ரமேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை ஆய்வாளர் மகேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கீதா மற்றும் பிச்சையா, கிடாரக்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் மாதவி ஆனந்தராஜ், ஊராட்சி செயலர், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.