கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கமுதி,
கமுதி அருகே கீழ ராமநதி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாம், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமை கமுதி யூனியன் தலைவர் தமிழ் செல்வி போஸ் தொடங்கி வைத்து பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள் ரவிச்சந்திரன், கால்நடை ஆய்வாளர் சுப்பிரமணியன், பராமரிப்பு உதவியாளர்கள் சிதம்பரம், தங்கராஜ், ஊராட்சி செயலாளர் முகமது அக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடல்புழு நீக்கம், சினை பரிசோதனை செய்தது, மலட்டு நீக்க சிகிச்சை அளித்தல். தாது உப்புக்கள் கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட்டது முடிவில் ஊராட்சி செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.