பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்


பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்
x

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

தேனி

பெரியகுளம் நகர் தென்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம். அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story