பொன்னியம்மன் கோவிலில் ஆனி திருவிழா


பொன்னியம்மன் கோவிலில் ஆனி திருவிழா
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

பொன்னியம்மன் கோவிலில் ஆனி திருவிழா நடைபெற்றது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சக்தி கரகம், அக்னி கப்பரை மற்றும் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story