மீனாட்சி, சொக்கநாதர் கோவிலில் ஆனி திருவிழா


மீனாட்சி, சொக்கநாதர் கோவிலில் ஆனி திருவிழா
x

அருப்புக்கோட்டை மீனாட்சி, சொக்கநாதர் கோவிலில் ஆனி திருவிழா தொடங்கியது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி, சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி, சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story