அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பேபி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் லதா முன்னிலை வகித்தார்.இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், அங்கன்வாடி ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சுகுணா, வள்ளி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story