அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.


Next Story