சேத்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம்


சேத்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம்
x

சேத்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சேத்தூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திறப்பு விழா

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டில் உள்ள வண்ணார் புதுத்தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதேபோல் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து முக்கிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி குடிநீரை தனியாக பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் முக்கிய இடங்களில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

அதனைத்தொடர்ந்து சேத்தூர் பேரூராட்சிக்கு புதிதாக சாஸ்தா கோவில் பகுதியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜபாளையம் தொகுதியில் குழந்தைகளின் நலன்கருதி அவர்களின் திறன் மேம்பாட்டு மற்றும் அடிப்படை வசதி குறித்து அனைத்து அங்கன்வாடி பணியாளர்களையும் அழைத்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பொதுமக்களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கினார். இதில் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி, பேரூராட்சி துணை தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன்சிலர் ராஜசோழன், பேரூர் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story