ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x

கோவில்பட்டியில் ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து மந்தித்தோப்பு ரோடு, வெற்றிவேல் நகரில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்தார். நேற்று அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அங்கன்வாடி கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முகர் பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள், கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில்பட்டி அருகே கல்லூரணியில் உள்ள காளியம்மன் - விநாயகர் கோவில் 3-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். ஜெயபிரகாஷ் நாராயணசாமி மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story