தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனராக அனந்த் மதுகர் சவுத்ரி பொறுப்பேற்பு
தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனராக அனந்த் மதுகர் சவுத்ரி பொறுப்பேற்றார்.
சென்னை
தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனராக (பெங்களூரு) அனந்த் மதுகர் சவுத்ரி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தென்மேற்கு ரெயில்வே, பெங்களூரு, சென்னை, கொச்சி ஆகிய மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனராகவும் பணி செய்வார். 1987-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் சர்வீஸ் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் பிரிவில் சேர்ந்தார். மின்மயமாக்கல், மின்சார என்ஜின்கள் மற்றும் பொது நிர்வாகத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். இதற்கு முன்பாக இவர் தென்கிழக்கு ரெயில்வேயின், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story