கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்


கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்
x

கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதற்கிடையே கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பிரிவு பகுதியில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்வதற்காக வந்த வாகனங்கள், செல்ல முடியாமல் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.



Next Story