எரியாத உயர்கோபுர மின்விளக்கு


வாணியம்பாடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஜயகுமார் (வயது 35). இவரது மனைவி கீதா. இவர் தனது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாகியும் திரும்பி வராததால் விரக்தியடைந்த விஜயகுமார், வீட்டின் கூரையில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story