சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

சிறுமி பலாத்காரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த 26.12.2018 அன்று 6 வயது சிறுமி சாக்லேட் வாங்க சென்றாள். அப்போது நடராஜன், நிறைய சாக்லேட்டுகள் தருகிறேன் என்று கூறி அந்த சிறுமியை கடையின் பின்புறமுள்ள ஒரு அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

உடனே சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

முதியவருக்கு ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story