மது குடித்து விஷ இலையை தின்ற முதியவர் சாவு


மது குடித்து விஷ இலையை தின்ற முதியவர் சாவு
x

மது குடித்து விஷ இலையை தின்ற முதியவர் இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னதம்பி மது அருந்தி விட்டு, விஷ இலையை சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னதம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story