தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

சிவகாசி மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்கள் தொல்லை

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் நடமாட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாயத்து பகுதிகளை ஒட்டி உள்ள பகுதியில் அதிக அளவில் நாய்கள் நடமாட்டம் இருக்கிறது.

சிவகாசி மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக நாய்களின் எண்ணிக்கையை குறைக்க எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதி இருந்தும் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுமக்கள் அச்சம்

பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை நாய்கள் துரத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சில இடங்களில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே செல்கின்றனர். நாய்களை கொல்ல தடை உள்ளதால் அவற்றுக்கு ஏற்படும் வெறி நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story