உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் முன்விேராதத்தில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் முன்விேராதத்தில் உணவு வினியோகம் ெசய்யும் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிறுவன ஊழியர்
நெல்லை கொக்கிரகுளம் அருகே உள்ள கீழவீரராகவபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் முகேஷ் (வயது 32). இவர் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவிதா (26) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் முகேஷ் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு இரவு 9 மணி அளவில் உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
பிணமாக கிடந்தார்
இதனால் சுவிதா செல்போனில் முகேசை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சுவிதா தனது உறவினர்களுடன் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு தேடிச் சென்றார்.
அப்போது, அங்குள்ள குருந்துடையார்புரம் ரெயில்வே கேட் அருகே முகேசின் மோட்டார் சைக்கிள் கிடந்தது. அருகில் இருந்த முட்புதரில் முகேஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.
முன்விரோதம்
இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகேஷ் ஏற்கனவே ஊர் நாட்டாண்மையாக இருந்துள்ளார். அப்போது ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், முகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு முகேஷ்தான் காரணம் என நினைத்து கைதானவரின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகேசை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மகராஜன் மகராஜன் (2௦), அழகுமுத்து (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே முகேசின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டை அடித்து நொறுக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கலெக்டரிடம் மனு
நேற்று மதியம் முகேசின் மனைவி சுவிதா மற்றும் உறவினர்கள் நெல்லை கலெக்டா் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சுவிதா, கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், 'எனது கணவரை கொலை செய்த நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் எனக்கு வேலை கிடைக்க உதவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.
நெல்லையில் முன்விேராதத்தில் உணவு வினியோகம் ெசய்யும் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.