கடலூரில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில்    செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாகனம்    கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

கடலூரில் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கடலூர்


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இது பற்றி கடலூர் மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர். துரைராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த வாகனமானது மாவட்டம் முழுவதும் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என கலெக்டர் தெரிவித்தார்.


Next Story