போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
பாடாலூர்:
திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). இவர், சம்பவத்தன்று லாரியில் ஆந்திராவில் இருந்து திருச்சி நோக்கி பேரீச்சம்பழம் ஏற்றிக்கொண்டு வந்தார். பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் வந்தபோது, அவருக்கும், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லாரி டிரைவர் பாலாஜி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தினார். இதையடுத்து பாடாலூர் போலீசார் அங்கு விரைந்து வந்து, பாலாஜியை கைது செய்தனர். லாரியை அப்புறப்படத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் லாரியை விடுவிக்கக்கோரியும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,பாலாஜி மற்றும் ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பாடாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது ஓட்டுனர் சங்கத்தினருடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சங்கத்தினர் கலைந்து சென்றனர்.