8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் உள்ள தென்னைநார் தொழிற்சாலை அருகில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி தன்னார்வலர்களான சந்தானம், அஷ்வின், சரண் ஆகியோர் அங்கு சென்றனர். பின்னர் மலைப்பாம்பை போராடி பத்திரமாக பிடித்தனர். பிடிபட்ட மலைபாம்பு 8 அடி நீளம் கொண்டது. இதையடுத்து வனத்துறை அலுவலகத்தில் மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பாம்பை பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் அடர்ந்த வனத்தில் விடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story