பெருமாள் கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது
பெருமாள் கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
புதுக்கோட்டை
திருமயத்தில் பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் பாம்பு ஒன்று வந்ததை பார்த்த கோவில் அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெருமாள் கோவிலில் இருந்த 8 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கறம்பக்குடி வள்ளுவர் திடல் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் வீட்டில் விஷப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 அடி நீள விஷப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story