அரசு நிலத்தை ஆக்கிரமித்த பொழுதுபோக்கு பூங்கா - கையகப்படுத்திய வருவாய்த்துறை அதிகாரிகள்
தனியார் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிக்காரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள பகுதியில், அதன் நிறுவனம் பல ஆண்டுகளாக நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் நில நிர்வாக ஆணையத்தின் உத்தரவின் பேரில், நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் இன்று அந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றனர். அங்கு ரோப்காரில் குதூகலமாக சென்று பொழுதை கழித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் திரும்பி வந்த பிறகு, பூங்காவை மூடி 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
Related Tags :
Next Story