அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கடையம் அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் செங்காளியம்மன், முப்புடாதி அம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், தங்கம்மன், பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதையொட்டி வருகிற 31-ந்தேதி காலை 4 மணிக்கு விக்னேசுவர பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு ஹோம பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.

1-ந் தேதி காலை 8 மணிக்கு கோபூஜை, கும்ப பூஜை, வேத பாராயணம், ஹோம பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடும், கோவில் விமான கலசங்கள் மற்றும் செங்காளி, முப்புடாதி, முத்தாரம்மன் உள்ளிட்ட அம்மன்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


Next Story