ஆடி 2-வது வெள்ளியையொட்டிநாமக்கல் அமச்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்


ஆடி 2-வது வெள்ளியையொட்டிநாமக்கல் அமச்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்
x
தினத்தந்தி 29 July 2023 12:30 AM IST (Updated: 29 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ஆடி மாத 2-வது வெள்ளிையொட்டி நாமக்கல் அமச்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பால்குட ஊர்வலம்

நாமக்கல் அடுத்த சின்ன முதலைப்பட்டியில் அமச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-வது வெள்ளி அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று அமச்சி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.

முன்னதாக பெரியவீதியில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் பால் குடங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை கவுன்சிலர் சசிகலா சவுந்திர பாண்டியன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது தெற்கு வீதி, முன்சீப் வீதி, மகா செல்வகணபதி கோவில், பகவதி அம்மன் கோவில், செல்லக்குமரன் கோவில் வீதி மற்றும் குட்டை தெரு மெயின் ரோடு வழியாக சென்று அமச்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

நேர்த்திக்கடன்

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பால்குடங்களை தலையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், பருவமழை பெய்ய வேண்டியும் அமச்சி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் திருமண தடை நீங்கியவர்கள் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டவர்கள் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு புஷ்பாஞ்சலி மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது.


Next Story