அம்மன் சப்பர பவனி


அம்மன் சப்பர பவனி
x

செங்கோட்டையில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை- இலத்துார் சாலையில் உள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் ஆன்மிக சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் கொடை விழா நடைபெற்றது. காலையில் வீரகேரளவிநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்கும அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிசட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நள்ளிரவு செண்டைமேளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் நித்யகல்யாணி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயத்தினர், இளைஞர் சங்கத்தினர், விழா கமிட்டியினா் செய்திருந்தனர்.


Next Story