அமித்ஷா பேச்சு: மீண்டும் மொழிப்போரை ஏற்படுத்தும் முயற்சி -கி.வீரமணி கண்டனம்


அமித்ஷா பேச்சு: மீண்டும் மொழிப்போரை ஏற்படுத்தும் முயற்சி -கி.வீரமணி கண்டனம்
x

அமித்ஷா பேச்சு: மீண்டும் மொழிப்போரை ஏற்படுத்தும் முயற்சி கி.வீரமணி கண்டனம்.

சென்னை,

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடந்த அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் 38-வது கூட்டத்துக்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வம்பை விலைக்கு வாங்கி உள்ளார். அவர், இந்தி திணிப்புக்கு வாதாடுபவராகவே இருந்து வருகிறார். அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்திய அரசமைப்பு சட்டத்தையே அவமதிப்பது போன்று மொழிகள் பற்றி அவர் கூறிய கருத்து அவரது ஆணவத்தை காட்டுகிறதா?, அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறதா? என்பது மக்களுக்கு விளங்கவில்லை.

பன்மொழிகள் பேசும் மக்களின் மொழிகளை வெறும் உள்ளூர் மொழிகள் என்ற சொற்றொடர் மூலம் கொச்சைப்படுத்தி உள்ளார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திராவிட மாடல் ஆட்சியின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ் செம்மொழி. உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழி.

அந்த தகுதி இந்திக்கோ, சமஸ்கிருதத்துக்கோ உண்டா? மீண்டும் மொழிப் போர், மொழி புரட்சி வெடிக்க முயற்சிக்கலாமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story