மலையடிவாரத்தில் கொலையாளி பதுங்கலா?
கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவிைய கொன்ற கொலையாளி மலையடிவாரத்தில் பதுங்கி உள்ளாரா? என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கெங்கவல்லி:
கல்லூரி மாணவி கொலை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவர், கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரை வீட்டுக்கு வந்து சென்ற போது, ரோஜாவை பார்த்துள்ளார். இதன் பின்னர் சாமிதுரை, ரோஜாவை ஒரு தலையாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ரோஜா ஏற்க மறுத்துள்ளார்.
கொலை
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இரவு ரோஜா தங்களது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த சாமிதுரை, காதலிக்க வற்புறுத்தவே அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ரோஜாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனிடையே ரோஜா அலறல் சத்தத்தை கேட்டு அவரது அக்காள் நந்தினி வெளியே வந்து பார்த்த போது சாமிதுரை மற்றும் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதை பார்த்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாமிதுரையை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் போலீசார் விசாரணையில், தன்னுடைய காதலை சாமிதுரை தெரிவித்தும், ரோஜா அதனை ஏற்க மறுத்து வந்துள்ளார்.
4 இடங்களில் முகாம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜா கல்லூரி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது அங்கு வந்த சாமிதுரை, அவரிடம் தன்னை காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் கல்லூரி பஸ் வந்ததும் ரோஜா அதில் ஏறி சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த ரோஜாவின் பெற்றோர், உறவினர்கள் சாமிதுரையை கண்டித்தது தெரியவந்தது.
தொடர்ந்து கொலையாளியை பிடிக்க ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளி சாமிதுரையை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னை, கோவை, கூடமலை, கடம்பூர் பகுதிகளில் முகாமிட்டு சாமிதுைரயை தேடி வருகின்றனர்.
மலையடிவாரத்தில் பதுங்கலா?
இது குறித்து ரோஜாவின் தந்தை முருகேசன் கூறுகையில், எனது மகள் ரோஜா கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகிறது. இன்னும் போலீசார் கொலையாளியை கைது செய்யவில்லை. கூடமலை பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் பதுங்கி உள்ள சாமிதுரைக்கு காலை, இரவு, மதியம் சாப்பாடு செல்கிறது. அவனது உறவினர்கள் எடுத்து செல்கிறார்கள். அவர்களை பிடித்து விசாரித்தால் சாமிதுரையை பிடித்து விடலாம். மாற்றுத்திறனாளியான நான் எனது மகளை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளேன். எனது குடும்பத்தின் மகிழ்ச்சியை சாமிதுரை குலைத்து விட்டார். அவருக்கு தகுந்த தண்டனை கிைடக்க வேண்டும் என்றார்.