அம்பை நகராட்சி கூட்டம்
அம்பை நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
அம்பை:
அம்பை நகராட்சி கூட்டம் தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம் என்ற கேபிள் கண்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சி உதவி அலுவலர் கணேசன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், பழுதடைந்த கோசாலை சீரமைப்பு, வாறுகால் சீரமைப்பு, குடிநீர் குழாய்களுக்கு நடைமேடை அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் மறுசீரமைப்பு, மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு மன்றத்தில் அனுமதி அளிப்பது உள்பட 39 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் அம்பை நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்காக ரூ.36.60 கோடி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கவுன்சிலர்கள் பலர் பேசினர். நகராட்சி தலைவர் கூறும்பொழுது, அம்பை நகரம் முழுவதும் உள்ள பழைய மின்விளக்குகளை மாற்றி புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும் என்றார். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.