முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1996-1998-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அந்தோணி டக்ளஸ், தலைமை ஆசிரியை பிரிடா ஆகியோர் தலைமை தாங்கினர். தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு அரசு வக்கீலும், முன்னாள் மாணவியுமான ஜென்சி வரவேற்று பேசினார். பள்ளி முன்னாள் மாணவரும், புதுச்சேரி மாநில நீதிபதியுமான கிறிஸ்டின், முன்னாள் மாணவர் அலெக்ஸ் அப்பாவு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னாள் மாணவர்களின் கரகாட்டம், பட்டிமன்றம், நடனம் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெபமணி, சுபாஷ், ரமேஷ், பபிதா ஆகியோர் செய்து இருந்தனர். முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னாள் மாணவியும், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலருமான பிரேமா நன்றி கூறினார்.