முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கயத்தாறு:
கடம்பூரில் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சான்றோர் நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழா நடைபெற்றது. இந்த சந்திப்பில் 1956 முதல் 1959-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இஸ்ரோவில் பணியாற்றும் மூக்கையா, எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, சண்முகையா, மதுரை நீதித்துறை நடுவர் சந்திரகுமார், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர் பாஸ்கரசெல்வபதி, மருத்துவ கல்லூரி பேராசிரியர் முத்துலதா, சர்வே துறை துணை இயக்குனர் கருப்பசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் தங்கராஜ்பாண்டியன், ராஜேந்திரன், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ராஜபான்சிங், மும்பை பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜெயக்குமார், இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் செயலாளர் அரசன் கணேசன் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துமாலை துணைவியார் பாக்கியலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். கடம்பூர் நாடார்கள் உறவின்முறை மகிமை பரிமாணத்தின் சென்னை வாழ் தலைவர் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். கடம்பூர் நாடார் உறவின்முறை தலைவர் வி.ஆர்.எம்.எஸ்.ஜெயராஜ், பொதுச் செயலாளர் எஸ். ஏ.டி.காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் ராம்குமார் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டி.ஜே.எஸ். ரத்தினகுமார் சங்க அறிமுக உரையாற்றினார்.
மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர்கள் செந்தில்குமார், சுப்பாராம், ராஜாராம், செயலாளர் வினோத் கண்ணன், துணைச் செயலாளர்கள் ராம பாண்டியன், சாமி ராஜ், விஜயபாஸ்கர், பொருளாளர் உச்சிமாகாளி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு தங்களது மலரும் நினைவு பகிர்ந்து கொண்டனர். அனைவரும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.