முன்னாள் மாணவிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவிகள் சங்க பொதுக்குழு கூட்டம் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடந்தது. முன்னாள் மாணவிகள் சங்க தலைவர் கல்பனா தலைமை தாங்கினார். சங்கத்தின் புரவலரும், முதல்வருமான பேபி லதா முன்னிலை வகித்தார். ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் (பொறுப்பு) காளீஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் இசக்கிமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் குமரேசன் வாழ்த்தி பேசினார்.
சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கிருஷ்ணவேணி சமர்ப்பித்தார். முன்னாள் மாணவிகள் தங்களுடைய கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு கல்லூரியில் உள்ள 6 பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர் நித்யா நன்றி கூறினார். கூட்டத்தில் முன்னாள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரியின் ஆசிரிய-ஆசிரியைகள் செய்திருந்தனர்.